NTT TAMIL

Current Date and Time
Loading...

குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு நீர் நோய் தொற்று அபாயத்தில் பகுதி மக்கள் என்கின்ற தலைப்பில் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அந்த செய்தி பிரதியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் பார்வைக்கு அனுப்பி இருந்தோம். அவரும் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அதிகாரிகளை ஆய்வு செய்வதற்காக அந்த பகுதிக்கு அனுப்பி இருந்தார்.

இந்த சூழ்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் குறிப்பிட்ட அந்த அவென்யூ பகுதிக்கு வந்து சாக்கடை நீரினை அகற்றி சுத்தம் செய்ததோடு மேற்கொண்டு வடிகால் அமைக்கும் பணிகளையும் தொடங்கியுள்ளார்கள்.

MLA அவர்களின் அறிவுறுத்தலின் படி… வடிகால் தண்ணீர்.. புதிதாக வந்துள்ள பஞ்சாயத்து clerk திரு.கண்ணன் அவர்களின் மூலமாக… வாகனம் வைத்து எடுக்கப்படுகிறது.

வெற்றி பெற்று பதவிக்கு வந்த பிறகு தொகுதி பக்கமே எட்டி பார்க்காத எம்எல்ஏக்கள் உள்ள இந்த காலத்திலும் தன் தொகுதியை சேர்ந்த மக்கள் ஒரு பிரச்சனையில் பரிதவித்து நிற்கும் பொழுது ஓடோடி வந்து அவர்களுக்கு உடனடியாக தீர்வினை தரும் எம்எல்ஏ திரு பழனியாண்டி அவர்களை ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள் போல சொன்னதை செய்யும் எங்கள் ஸ்ரீரங்கம் எம் எல் ஏ என்கின்ற பெயரில் அழைப்பது சாலச் சிறந்தது.

Related Posts

POST MY ADD