NTT TAMIL

Current Date and Time
Loading...


16வருடமாக அடிப்படை வசதி இன்றி, மின்சாரமாவது கிடைக்குமா?

தமிழகத்தில் இப்படியொரு இடமா..? மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள்? கோரிக்கைகளை வைத்து தவிக்கும் மக்கள்

தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த விஷயம் சென்றிருந்தால், இந்நேரம் தங்களுக்கு மின்சாரம் கிடைத்திருக்கும் என்கிறார்கள்.

இங்கு உள்ள மக்கள். ஆகவே மின்சார வாரிய அதிகாரிகள் தயவு செய்து கருணையுடன் நோக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்பராய்த்துறையில் நந்தவனம் எனும் இடத்தில் 35 குடும்ப மக்கள் கடந்த 16 வருடமாக மின்சாரம் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகிறார்கள்.

நந்தவனத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி கோகிலா தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அவரது வீட்டிற்கு மின்சார வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரும்படி கோரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பராய்த்துறையில் உள்ள தாருகாவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்,100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகட்டி குடியிருந்து வந்தனர். கடந்த 2011-ம் ஆண்டு திருச்சி – கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக அவர்களின் குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டன. அன்றைய ஆளுங்கட்சி பிரதிநிதிகளின் முயற்சியால் அதே கோயிலுக்குச் சொந்தமான நந்தவனம் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், மின்சாரம், குடிநீர், சாலை, கழிவறை போன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராததால் கடந்த 16வருடங்களாகப் பரிதவித்து வருகின்றனர்..

மக்கள் வசிக்கும் இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதால், அறநிலையத்துறை அடிமனை வாடகை ரசீது கொடுத்தால் மட்டுமே அடிப்படை வசதி செய்து தர முடியும் என்று அனைத்து துறைகளும் கையை விரித்து விடுகின்றனர். மக்கள் அடிமனை வாடகை கட்ட தயாராக இருந்தும் அறநிலையத்துறை இன்று வரை அவர்களிடம் அடிமனை வாடகை வாங்கிக் கொண்டு ரசீது போட்டு தரவில்லை.

“கடந்த 2022-ம் வருஷம் இந்தக் கோயில் இ.ஓ-வா இருந்த ராகினி, 35 குடும்பங்களுக்கும் வாடகை செலுத்தச் சொல்லி நோட்டீஸ் அனுப்பினாங்க. ‘அடிமனை ரசீது கிடைக்கப் போகுது’னு சந்தோஷமா எல்லாரும் பணம் கட்டப் போனாங்க. ஆனா, அந்த மேடம் பணத்தையும் வாங்கலை, ரசீதும் போட்டுக் கொடுக்கலை. என தெரிவிக்கின்றனர்,

நந்தவன வாசிகள்.

பொதுவாக இன்றைய தேதியில் எவராலும் ஓரிரு மணி நேரமே மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது. பாவம் மக்கள் கடந்த 16 வருடமாக மின்சாரம் இன்றி கஷ்டப்படுகிறார்கள. மின்சாரம் என்பது இன்றைய தேதியில் ஒரு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. மின்சாரம் இல்லாததால் அங்கு வசிக்கும் பள்ளி குழந்தைகள் தங்கள் பள்ளி படிப்பை சரிவர தொடர்வதில்லை. அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள், சமூக ரீதியாக உரிய அந்தஸ்து கிடைப்பதில்லை என்று கூறுகிறார், இந்த மக்களுக்கு மின்சாரம் பெற்று தருவதற்காக கடந்த 16மாதங்களாக போராடிவரும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர்.

இங்கு வசிக்கும் மக்கள் இருப்பிட சான்றிதழ் பெற்றுள்ளனர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவைகளும் உள்ளன அதன் பின்னரும் மின்சார வாரியம் மின்சார இணைப்பு தர மறுக்கிறது என்கிறார்கள் மக்கள்.

பல நேரங்களில் நமது நீதிமன்றமும் மின்சாரம் என்பது மக்களின் அடிப்படை தேவை, அதை மக்களுக்கு கொடுக்க வேண்டும், அவர்கள் புறம்போக்கு நிலத்தில் இருந்தாலும் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்தாலும் என்று சட்டம் போட்டுள்ளது.

அதன்படி மின்சார வாரியத்திலும் அதற்கு வழிவகை உள்ளன. தமிழ்நாடு மின்சார வாரிய விதிகளுக்கு உட்பட்டு ஒரு வாடகைதாரர் இடத்தின் உரிமையாளரின் அனுமதியின்றி மின்சார இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று சொல்கிறது. 16வருடமாக அடிப்படை வசதி இன்றி, மின்சாரமாவது கிடைக்குமா?

Related Posts

POST MY ADD