NTT TAMIL

Current Date and Time
Loading...

நான் எட்டாவது படிக்கும்போது, ரொம்ப வறுமை, வேற வழியில்லாம எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு திருப்பூர் வந்துட்டேன். அப்போ எனக்கு ஒரு நாளைக்குக் கிடைச்ச கூலி வெறும் 20 ரூபாய் தான். ஒரு வாரத்துக்கு உழைச்சா 140 ரூபாய் கிடைக்கும். அதுல பாதி வீட்டுக்கு அனுப்பிட்டு, மீதி காசுல என் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாம தவிச்சிருக்கேன்.அந்த சமயத்துல, திருப்பூர்ல கிடைக்கிற ஒரு சின்ன தேங்காய் பண்ணை சாப்பிடணும்னு எனக்கு எவ்வளோ ஆசை இருந்துச்சு தெரியுமா? அதுக்காக அதிகமா சம்பாதிச்சு சாப்பிடணும்னு அலைவேன். அந்த ஏழ்மை என்னை ரொம்பவே வாட்டி வதைச்சது.காலம் எவ்வளோ வேகமா போகுது பாருங்க… இன்னைக்கு அதே திருப்பூர் மண்ணு என்னை சிவப்புக் கம்பளம் விரிச்சு வரவேற்குது! நான் நினைச்சுகூட பார்க்கல, இந்த மண்ணு எனக்கு இவ்வளவு பெரிய மரியாதையை கொடுக்கும்னுதிருப்பூர்ல ஒரு தனியார் கல்லூரியில நடந்த ‘மாமன்’ படத்தோட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டப்போ, நடிகர் சூரி எமோஷனலா பேசியிருக்காரு.அந்தப் பழைய நினைவுகள் எல்லாம் என் மனசுல வந்து போகுது. ஒரு காலத்துல ஒரு தேங்காய் பண்ணு கூட சாப்பிட வசதியில்லாத நான், இன்னைக்கு இவ்வளவு பெரிய வரவேற்பைப் பார்க்கும்போது என் கண்ணுல இருந்து கண்ணீர் வந்துடுச்சு. இந்த மண்ணுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு எனக்குத் தெரியல. என் வாழ்க்கையில இது ஒரு மறக்க முடியாத தருணம்.நடிகர் சூரி, தன்னுடைய கஷ்டமான காலங்களை நினைவுகூர்ந்து, திருப்பூர் மக்கள் அளித்த அன்புக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். #facebookpost #tamilcinema #ActorSoori #newtrichytimes #NewTrichyTimesCinema

Related Posts

POST MY ADD