சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் மதுரையில் தனியார் விடுதியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் விழா நடைபெற்றது.
சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் வேந்தர் பாண்டியராஜன் அவர்கள், பழைய காமராஜர் பல்கலைக்கழகத்தின் மேலான் சோலைமான் அவர்கள்,உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மணிகண்டன் அவர்கள், வேர்ல்ட் ரெக்கார்ட் செய்யும் மாணவ மாணவர்களை ஊக்குவிக்கும் டாக்டர் பாலு அவர்கள், கொற்றவை குரூப் ஆப் கம்பெனி நிறுவன தலைவர் நாகராஜ் மற்றும் பல துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு பலத்துறை சாதனையாளர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்கள்.
திருச்சி மாவட்டம்,
லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம்
கீழரசூர் ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர், பத்திரிக்கை நிருபர், ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிறுவனத் தலைவர்
க.முத்துசாமி (எ) முத்துசூர்யா என்பவர்
2004 ல் இருந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவை மற்றும் கல்வி சார்ந்த மாணவ – மாணவிகள் மேம்பாட்டிற்காக செய்து வரும் சமூக பணியை பாராட்டி
சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம்
Dr – மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தனர் .
மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்த சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழக கல்வி நிறுவனத்திற்கும், எனது சமூகப் பணிக்கு என்றும் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கொடுத்து வரும் தனது கீழரசூர் ஊராட்சி இளைஞர்கள், பொதுமக்கள், சூர்யா பிரண்ட்ஸ் நற்பணி மன்ற பொறுப்பாளர்கள், அடுத்த தலைமுறை வளமான வாழ்வியல் குழு பொறுப்பாளர்கள், ஊராட்சி வளர்ச்சி மன்றம் பொறுப்பாளர்கள், ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை பொறுப்பாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மகளிர் சுய உதவி குழுக்கள் என்று ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியமைக்கு முத்துசூர்யா அவர்கள் நன்றி கூறினார்.