. தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாத்துக்காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக திருவெறும்பூர் ஒன்றியத்தில் முற்றுகை மறியல் செய்து சாலையை ஸ்தம்பிக்க வைத்த மாற்றுத்திறனாளிகள்,

மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம் நடைபெறுவதாக Bdo விடம் இருந்து முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டது. சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் 50 பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர். என்ற அடிப்படையில் J. சித்ரா, வழிகாட்டுதல் செய்து 3.00pm மீட்டிங்கிறகு 2.45pm க்கு மக்கள் organise ஆகி காத்துக்கொண்டிருந்தோம். அதே ஹாலில் 2 Bdo க்களும், punchayathu Bdo, மற்றும் 100 நாள் பணி Bdo அண்ணாதுரை ஆகியோர் அதே அறையில் காக்க வைத்துவிட்டு, கிளெர்க் meeting நடத்துகிறார்கள் கிட்ட தட்ட 4 மணிநேரம். அதுவரை யார் Bdo என்று கூட சொல்லாமல் காத்திருக்க வைத்தனர்.. உடனடியாக முடிவெடுத்து அனைவரும் தஞ்சாவூர் சாலையை மறித்தவுடன், காவல் துறை, வந்து பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள். சாலையை விட்டு யூனியன் வாயில் படியை மறித்து உட்கர்ந்துவிட்டனர் பிறகு உடனடியாக Bdo பேச்சுவார்த்தைக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து இனி இந்த தவறு நடக்காது என கூறி 100 நாள் வேலை கோரிக்கையை ஏற்று செய்து தருவதாக ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் மறியல் முடிவுக்கு வந்தது. இதில் புதிய ஒன்றிய குழு உறுப்பினர்கள் :S. ஸ்டாலின், A. அருண்குமார், முரளிதரன், சாமுவேல் ரபேக்கா, இளங்கோவன், ஜெகதாம்பிக்கை. U ஆகியோர் முன் நின்றனர்.
