திருச்சி பிப் 07

திருச்சி மாவட்டம் மாத்தூரில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக முன்பு 15வருடத்திற்கு மேலாக பணி செய்து வந்த 328 தற்காலிக பேராசிரியர்களை
இவர்களை பல்கலை நிர்வாகம் எந்த வித முன்னறிவிப்பின்றி வாய்மொழி உத்தரவாக பணி நீக்கம் செய்து அறிவித்துள்ளனர்.
இதனை கண்டித்து பல்கலைகழக வளாகத்திற்கு முன்பு பேராசிரியர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கணினி பிரிவு
பேராசிரியர் ஜெய்சன்விமல்ராஜ்
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 16உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இதில் 328 தற்காலிக பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம்.
பல்கலைக்கழகப் பதிவாளர் எந்தவித முன் அறிவிப்பின்றி வாய்மொழி உத்தரவாக கடந்த டிசம்பர் மாசம் எங்களை பணி நீக்கம் செய்துள்ளார்.
இதுகுறித்து எழுத்துப்பூர்வமாகவோ, அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
16 உறுப்பு கல்லூரிகளில் திருச்சி கல்லூரியில் மட்டும் நாங்கள் ஜனவரி மாதம் முழுவதும் வகுப்புகள் எடுத்தும் அதற்கான ஊதியம் வழங்க்கப்படவில்லை.
பணி நீக்கம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் மீண்டும் ஆசிரியர்களை பணி நியமனம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
எனவே, உடனடியாக நிர்வாகம் உர்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து அமைச்சரிடம் கொண்டு சென்ற போது பேசுவதாக தெரிவித்தனர் நான்கு முறை இதுவரை அவர்களை சந்தித்திருக்கிறோம் ஆனால் எந்தவித பதிலும் எங்களுக்கு அவர்கள் தரவில்லை.
மேலும், தமிழக முதல்வர் 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தற்காலிக தொகுப்பூதிய பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என என அறிவித்தார். அதனை உடனடியாக முதல்வர் பரிசீலனை செய்து வருகிற சட்டமன்றத் தொடரில் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பணி வழங்க வேண்டும்,
முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களது போராட்டத்தை தீவிரட்டுவோம் என தெரிவித்தார்.




