New Trichy Times

Current Date and Time
Loading...

09-09-2025 அன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக வாயிற் முன்பு, 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கூட்டத்தில் முடிவு.

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று (07-08-2025) மாலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

INTUC பொதுச் செயலாளர் திரு. கா.இளவரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில்,:-

அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.கே.சிவன் அவர்கள்,

ஏ.டி.எம்.எஸ் தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஜெய்சங்கர் அவர்கள்

சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு புவனேஸ்வரன் அவர்கள்

ஏ ஐ டி யூ சி தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திரு.சி.சந்திரகுமார் அவர்கள்

ஒர்க்கர்ஸ் வாய்ஸ் பொதுச் செயலாளர் திரு கார்த்திகேயன் அவர்கள்

TNCSC INTUC மாநிலத் துணைத் தலைவர் திரு.வெங்கடேசன் அவர்கள்

AIEPFPWA பொதுச் செயலாளர் திரு ஏ கே சந்தானகிருஷ்ணன் , திரு.நந்தகுமார் திரு.கஜபதி, திரு.வெங்கடேசன் திரு.பாலகிருஷ்ணன் திரு.சிவசங்கரன் திரு.அன்பழகன் திரு.இளமுருகு
திரு ராஜவேல் மற்றும்
திரு தனசேகரன் கலந்து கொண்டார்கள்.

ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு :-

  1. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க கோரியும்
  2. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றிய ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட குடும்ப நல நிதியை திரும்ப வழங்க கோரியும்
  3. G.O.MS 204 Finance ( Health Insurance Department ) Date :- 30-06-2022 ன்படி அரசு மற்றும் அரசு பொதுத் துறையில் ஓய்வு பெற்ற அரசு மற்றும் அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்க பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்க பட வேண்டும் எனவும்

உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தரக் கோரி செப்டம்பர் 9- ஆம் தேதி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கோயம்பேடு அலுவலக வாயிற் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

மேலும் மேற்கண்ட கோரிக்கைகளுடன்

  1. NCCF கொள்முதலை தடுத்து நிறுத்த கோரியும்
  2. பருவ காலப் பணியாளர்களை பணி நிரந்தரம் கோரியும்
  3. கூட்டுறவுத் துறையில் இருந்து TNCSC யில் பணியமறுத்தப்படும் அதிகாரிகளை திரும்பப் பெற கோரியும்
  4. பருவ காலப் பணியாளரிடம் பிடித்தம் செய்யப்படும் ரெக்கவரி தொகையை கைவிடக் கோரியும்
  5. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிக்கொடையை ரூபாய் 25 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும்

உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதென ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

இப்படிக்கு

  • TNCSC தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD