NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி கோரையாற்றில் குப்பைகளை கொட்டி, தீ வைத்து கொளுத்திய நாச்சிக்குறிச்சி ஊராட்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

திருச்சி மாவட்டம் , மணிகண்டம் ஒன்றியம், நாச்சிகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தீரன் நகர் மற்றும் விஜயா நகர் லே அவுட் பகுதிகளில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை ஊராட்சி ஊழியர்கள் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோரையாற்றின் கரை பகுதி மற்றும் மனை பகுதியிலும் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதே போன்று, தினமும் மதிய நேரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை நாச்சிக்குறிச்சி ஊராட்சி ஊழியர்கள் தீ வைத்து கொளுத்தி வருகின்றனர்.

இதனால் துர்நாற்றம் மற்றும் புகை ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

நாச்சிக்குறிச்சி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து கோரையாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், குப்பைகளை தீ வைப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரின் முகவரி பிரிவுக்கு புகார் கொடுத்தும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் whatsapp வாயிலாக புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மிகவும் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Related Posts

POST MY ADD