திருப்பராய்த்துறை ஊராட்சியில் காவிரி நீர் வந்து கடந்த 5 நாட்களுக்கு மேலாக ஆகிவிட்டது போர்வெல் தண்ணீர் என்கிற பெயரில் இந்த வாய்க்கால் நீரைதான் குழந்தைகள் முதல் பெரியோர்களே அனைவரும் பருகின்றனர். ஊராட்சிக்கு மட்டும் காவிரி நீரை தருவதை ஊராட்சி நிர்வாகம் இவ்வளவு தயக்கம் ஏன் காட்டுகிறது என்று தெரியவில்லை.
இந்த வாய்க்கால் குடிநீர் மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததா இல்லையா என்று குடிநீரை பரிசோதித்து வழங்குமாறு கிராம மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
பேருக்கு தான் காவிரி கரை ஓரத்தில் குடி இருக்கிறோம் திருப்பராய்த்துறை மக்களுக்கு காவிரி குடிநீர் கிடைப்பது அத்திபூப்பது போல் எட்டாக்கனியாக உள்ளது என்று வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர் மக்கள்.