ஆகஸ்ட் 7
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் தூய்மைபணியாளர்களின் கோரிக்கைகளுக்காக இன்று காலை காத்திடுப்பு போராட்டம் தொடங்கியது. ஹியூமன் கிரேட் நிறுவனம் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்துள்ள தினக்கூலி 172 ரூபாய் வழங்க வேண்டும், ஓட்டுநராக பணிபுரிபவர்களுக்கு ரூபாய் 802 வழங்க வேண்டும்,PF, ESI ஊழியர்களிடம் பிடித்து நிறுவனத்தின் பங்கையும் செலுத்தி அதற்கான ரசிதையும் வழங்க வேண்டும்,LIC பிடித்தம் செய்து கட்ட வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் டப்பா கூட்டுவதற்கு விளக்குமாறு வழங்க வேண்டும், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும், குப்பைகளை கொட்டுவதற்கு இடம் ஒதுக்கி தர வேண்டும், சம்பளத்திற்கு பில் தர வேண்டும், தீபாவளி போனஸ் 20% வழங்க வேண்டும், மே தினத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டித் தர வேண்டும் போன்ற 10 மேற்பட்ட கோரிக்கைகள் கோரிக்கை வைத்தனர்.
தலைமை செல்வகுமார் கிளை தலைவர் லால்குடி, முன்னிலை ராசாத்தி, அஞ்சலை, கொளஞ்சி, கருப்பையா, மாதவி, அருள்நாதன், ஆறுமுகம் மற்றும் சம்பத் புறநகர மாவட்ட செயலாளர், பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர் ஊரக வளர்ச்சி துறை, பாலமுருகன் விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர், மகாமணி செயலாளர் நகராட்சி கிளை லால்குடி, நன்றியுரை நாகராஜ் கிளை பொருளாளர் நகராட்சி லால்குடி, திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சி ஐ டி யு திருச்சி புறநகர் மாவட்டம் காத்திருப்பு போராட்டத்திற்கான ஏற்பாடு செய்திருந்தனர்.