NTT TAMIL

Current Date and Time
Loading...

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத் துணைத் தலைவர்கள் தளபதி அப்பாஸ் ,Y. ரஹீம் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் Er.A.முகமது சித்திக், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் Er.N.G. சதாம் உசேன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் 3
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக சமுதாய அமைப்புகள் உலமா பெருமக்கள் , வக்ஃப் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரையும் ஒருங்கிணைத்து மலைக்கோட்டை மாநகர் திருச்சியில் மாவட்ட மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

  1. திருச்சி மாநகராட்சி முழுவதும் தரமற்று வழங்கும் உணவுப் பொருட்களை மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
  2. அதிகரித்து வரும் கோடை வெப்பத்திற்கு திருச்சி மாவட்டம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல் திறக்க வேண்டும்.

.

இந்நிகழ்வில் SDTU மாநில செயலாளர் K.முஹம்மது ரபீக்,மாவட்ட பொருளாளர் S.பிச்சைக் கனி,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட்.மஜீத், ந.சிராஜ்,கிழக்கு தொகுதி தலைவர்
I.சபியுல்லா B.com.,திருவெறும்பூர் தொகுதி தலைவர் Er.I. ஷேக் முகம்மது,மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா,SDTU மாவட்ட செயலாளர் சக்கரை மீரான்,வர்த்தகர் அணி தலைவர் Dr.S. பக்ருதீன்,மாவட்ட பேச்சாளர் இமாம்.சாகுல் ஹமீது
இன் ஆமி,திருச்சி ஜாகீர்,விம் மாவட்ட தலைவர் தௌலத் நிஷா,விம் மேற்கு தொகுதி தலைவர் முபினா,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் உபைதூர் ரஹ்மான்,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இறுதியாக மாவட்ட செயலாளர் மதர்.Y. ஜமால் முகமது அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Related Posts

POST MY ADD