NTT TAMIL

Current Date and Time
Loading...

ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நேற்று, 04/02/2026 மூன்று மணி நேரத்திற்கு மேலாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இரண்டு மணிக்கு வந்து இறங்கிய அதிகாரிகள் மாணவ மாணவிகளை தனித்தனியாக அழைத்து பேசியுள்ளனர். சில ஆசிரியர்களையும் தனியாக விசாரித்துள்ளனர்.

பின்னர் ஆசிரியர்களை மட்டும் தனியாக வைத்து சட்டம் சொல்வது என்ன? எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் நிர்வாகமே சொன்னாலும் தவறு செய்யக்கூடாது பெண் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். 100% தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் மாணவ மாணவிகளையும் ஆசிரியர்களையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்க கூடாது இரவு நேர வகுப்புகள் நடத்தக்கூடாது பள்ளி மாணவ மாணவிகள் உரிய நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்கு ஏற்றார் போல் பள்ளியை முடித்து அனுப்ப வேண்டும். சிறப்பு வகுப்புகள் அதிக நேரம் நடத்தக்கூடாது. 100% தேர்ச்சி வேண்டும் என்ற காரணம் காட்டி இடையில் மாணவ மாணவிகளை பள்ளியை விட்டு நீக்க கூடாது என்று அறிவுரைகளை வழங்கி மீண்டும் இது சம்பந்தமாக விசாரிக்க வருவோம் என்று தெரிவித்துச் சென்றுள்ளனர்.

கடந்த வருடம் இதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் நூறு சதவீத தேர்ச்சி வேண்டுமென்று இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவனை திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல வாரிய தலையிட்டால் மீண்டும் இதே பள்ளியில் சேர்க்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

தற்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரே, தலைமை ஆசிரியரும், நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அரசாங்கத்தை தொடர்பு கொண்டதால் இந்த ஆய்வு நடந்ததாக தெரிகிறது

தன்னிடம் படிக்கும் மாணவ மாணவிகளை தனது சொந்தக் குழந்தையாக நினைத்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தைரியமுடன் அரசாங்கத்தை தொடர்பு கொண்ட ஆசிரியரை, பெற்றோர்களும்,ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் மனதார பாராட்டுகிறார்கள்.

தமிழ்நாடு அரசும், மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகமும் இணைந்து, ஆபத்தில் உள்ள குழந்தைகளுக்கான 24/7 கட்டணமில்லா உதவி எண் 1098 (Childline) மூலம் பாதுகாப்பு வழங்கி வருகின்றன. இந்த சேவை, பாலியல் துஷ்பிரயோகம், குழந்தை திருமணம், மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்களில் இருந்து குழந்தைகளை மீட்கவும், அவசர உதவி வழங்கவும் காவல்துறை மற்றும் சமூக நலத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது

சைல்ட் லைன் 1098 மற்றும் தமிழக அரசின் முக்கிய தகவல்கள்:
பணி: 1098 என்பது 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்து நேரங்களில் (கடத்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், ஆதரவற்ற நிலை) உடனடி உதவி வழங்கும் 24 மணி நேர சேவை. ஒருங்கிணைப்பு: சைல்ட்லைன் தற்போது அவசரக்கால பதில் ஆதரவு அமைப்பு 112 (ERSS-112) உடன் ஒருங்கிணைக்கப்பட்டு, இன்னும் வலுவான நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் செயல்படுகிறது. தொடர்பு எண்: 1098 (நாடு முழுவதும் செயல்படும் கட்டணமில்லா எண்).

தமிழ்நாடு அரசின் திட்டங்கள்: முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்: பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நிதி உதவி வழங்குதல். தொட்டில் குழந்தை திட்டம்: கைவிடப்பட்ட குழந்தைகளை பாதுகாத்தல்.
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (BBBP): விழிப்புணர்வு மற்றும் கல்வி மேம்பாடு.

கண்காணிப்பு: தமிழ்நாடு காவல்துறை மற்றும் மாவட்ட சமூக நலத்துறை இணைந்து, 1098 மூலம் வரும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக, எவரும் 1098 என்ற எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.

About Author
NTT தமிழ்

New Trichy Times இது சாமானியனின் உரிமைக்குரல்

View All Articles
Check latest article from this author !
வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக திருச்சி எஸ் டி பி ஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடுத்தெருவில் போராடும் பேராசிரியர்கள் – அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி -தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள் கோரிக்கை
1% செஸ் வரியை நீக்கி மக்காச்சோள விவசாயத்தைப் பாதுகாத்ததைப் போலவே, மக்காச்சோளத்திற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம் செய்து, அதற்கு ஈடாக மானியம் வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் துரை வைகோ எம்.பி வேண்டுகோள்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்த துரை வைகோ எம்.பி

Related Posts

POST MY ADD