NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி, டிச :06

மாத்தூர் ரவுண்டானாவில் இருந்து- துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் சாலை இடையில்- இடதுபுறம் அண்ணா நகர், போலீஸ் காலனி செல்லும் சாலையின் இடதுபுறும் பேருந்து நிறுத்தம் உள்ளது. இது பல மாதங்களாக பராமரிப்பு இன்றி சிமெண்ட் இருக்கை பகுதி வெடித்து, சந்துகளில் சில விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக உள்ளது. இன்று சுமார் பகல் 2 மணி அளவில், மாணவர்கள், பேருந்து பயணிகள் பேருந்துக்காக வழக்கமாக உட்கார்ந்து இருந்தனர்

.திடீரென்று நான்கு அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று வந்து மக்களிடையே பீதியை கிளப்பி பொந்துக்குள் நுழைந்து விட்டது .எல்லோரும் கூக்குரலுடன் வெளியே வந்தனர் .அதன் பின்னர் எம்ஜிஆர் நகரில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் மற்றும் மாவட்ட சாலை பாதுகாப்பு உறுப்பினர் கோவிந்தராஜ் அவர்களுக்கு தெரிவித்தனர்.

உடனே இவர் நவல்பட்டு தீயணைப்பு பாதுகாப்பு காவல் நிலையத்திற்கு சென்று சம்பவத்தை விவரித்து கூறியதின் அடிப்படையில், நான்கு பாதுகாப்பு காவலர்கள் வந்து பாம்பு தங்கி உள்ள இடத்தை சோதனை செய்து ,பாம்பினை இலகுவாக பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து எடுத்துசென்றனர்

.தற்போது பிடிக்கப்பட்ட பாம்பு சிறியதாக இருந்தாலும் ,வேறு பல விஷப்பூச்சிகள் பாம்புகள் தங்கும் இடமாக காட்சியளிக்கிறது .பேருந்து நிறுத்தம், மக்கள் உட்காருவதற்கும் நிற்பதற்கும் தகுதியற்றதாக உள்ளது.இதனை பேருந்து பயணிகள் நலம் கருதி நவல்பட்டு / கும்பக்குடி ஏடி பஞ்சாயத்து அலுவலர்கள் நேரில் சென்று கண்காணித்து போர்க்கால அடிப்படையில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டி பயணியர் மகிழ்வுடன் பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

இந்த புகாரின் அடிப்படையில், கால தாமதம் இன்றி நவல்பட்டு தீயணைப்பு படையினர் செயல்பட்டமைக்கு நுகர்வோர் அமைப்பின் சார்பாக, தீயணைப்பு நிர்வாக அலுவலர் களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

Related Posts

POST MY ADD