
ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் முனைவர் மோகன்ராம் தலைமை தாங்கினார்.

முக்கிய நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றி ஆலோசனையில் ஈடுபட்டனர்.

முக்கிய தீர்மானங்களாக ஸ்ரீரங்கம் கீழவாசல் கோபுரம் பல ஆண்டுகளாக மூடி இருக்கும் காரணத்தினால் கோபுர வாயிலை கடந்து செல்ல இயலாமல் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் அவதிக்குள்ளாவதாகவும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை இந்து அறநிலையத்துறை எடுக்கவில்லை எனவும் உடனடியாக கீழவாசல் கோபுரத்தை சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் எனவும் காலம் தாழ்த்தினால் பொதுமக்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

ஸ்ரீரங்கம் பொதுமக்களுக்காக இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்துவது

12ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்புகளுக்கான ஆலோசனைகள் வழங்குவதற்காக ஒரு சிறப்பு கல்வி முகாம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக விஜயதசமி நாளான இன்று ஸ்ரீரங்கநாதர் தங்க குதிரை வாகனத்தில் காட்டழகிய சிங்கர் கோவிலில் அம்பு போட்டு விட்டு வீதியுலா வருவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அஇஅதிமுக அமைப்புச்செயலாளர் தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமை கொறடா மனோகரன் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தனர்.






