
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் எலமனூரில் 5000 ரூபாய் செலவில் சூரிய வெளிச்சத்திற்கு ஏற்ப தானாக இயங்கும் தெருவிளக்கு சுவிட்ச் அமைத்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் எம் ஐ டி யில் படித்த பொறியாளர் சத்தியமூர்த்தி அவர்கள்.
தானாக இயங்கும் தெருவிளக்கு சுவிட்ச் நிறுவி மின்சாரத்தையும், தேவையில்லாத மனித உழைப்பையும் சேமிக்கிறார்.

கடந்த ஒரு வருடமாக எலமனூரில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. தானாக இயங்கும் தெருவிளக்கு சுவிட்ச்கான முழு செலவையும் தானே ஏற்றுக் கொண்டு தான் வசிக்கும் ஊரில் தெருவில் நிறுவியுள்ளார். 01 சுவிட்ச் அமைத்ததால் 4500 ரூபாய் செலவானதாக, இதுவே 50-100 என செய்தால் கிட்டத்தட்ட 2000 முதல் 3000 வரை செய்து விடலாம் என்றும் கூறுகிறார்
பொதுவாக மக்கள் ஆட்டோமேட்டிக் சுவிட்சை மட்டுமே அமைப்பார்கள். அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயங்கும், மாலை 6 மணிக்கு எரிய வைக்கும், காலை 6 மணிக்கு நின்று விடும்

.
ஆனால் இவர் அமைத்துள்ள இந்த சுவிட்ச் சூரிய வெளிச்சத்திற்கு ஏற்ப தானாக இயங்கும், ஒரு வேலை மாலை 4 மணிக்கு இருட்டு ஆகிவிட்டால் இந்த ஸ்விட்ச் தெரு விளக்குகளை தானாக ஆன் செய்து விடுகிறது. வெயில் காலங்களில் காலை 4 மணிக்கு விடிந்து விடும் அப்பொழுது இந்த ஸ்விட்ச் தானாக தெருவிளக்குகளை அணைத்து விடும் என்பது இதில் உள்ள ஒரு சிறப்பு அம்சமாகும்.
தற்பொழுது இவரிடம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களும், தொகுப்பு வீடுகளில் வசிப்பவர்களும் இவரது இலவசமான சேவையை பயன்படுத்தி தங்களது பகுதியில் இந்த தானியங்கி அமைப்பை நிறுவி வருகின்றனர்.
அதேபோல் அரசாங்கம் இவரது சேவையை பயன்படுத்தி தமிழக முழுவதும், நாடு முழுவதும் மிகக் குறைந்த செலவான 2000 ரூபாய் எல்லா தெருகளுக்கும் தெருவிளக்குகளுக்கும் இந்த தானாக இயங்கும் தெருவிளக்கு சுவிட்ச் அமைப்பை அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. பொறியாளர் சத்தியமூர்த்தி அவர்களின் தொலைபேசி எண்-89030 12942.

பொறியாளர் சத்தியமூர்த்தி ஐயாவை பற்றி சொல்வதென்றால், உலகளாவிய வாகனத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன், எம் சத்தியமூர்த்தி தலைமைத்துவம், புதுமை மற்றும் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக நிற்கிறார். விற்பனைக்குப் பிந்தைய செயல்பாடுகள், தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் வணிக மேலாண்மை ஆகியவற்றில் அவரது தொலைநோக்கு அணுகுமுறையால் புகழ்பெற்றது, அவரது பயணம் நிசான், டாடா, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஹோண்டா போன்ற தொழில்துறை ஜாம்பவான்களை கடந்து, இந்தியா மற்றும் ஜி.சி.சி நாடுகள், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), குவைத், கத்தார், பஹ்ரைன், பஹ்ரைன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் அழியாத முத்திரையை பதித்துள்ளது.
பொறியாளர் சத்தியமூர்த்தி ஒரு அனுபவமிக்க வாகனத் துறைத் தலைவர் மட்டுமல்ல, புதிய உயரங்களை அடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கத் தயாராக உள்ள ஒரு உணர்ச்சிமிக்க பயிற்சியாளர். அவரது கதை பின்னடைவு, புதுமை மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவற்றில் ஒன்றாகும் – வாகன சேவையின் ஆற்றல்மிக்க உலகில் மாற்றத்தை உருவாக்க மற்றும் வெற்றியை அடைய விரும்பும் அனைவருக்கும் விலைமதிப்பற்ற வழிகாட்டுதலை வழங்குகிறது.
ஓய்வுக்கு பின் தற்போது விவசாயம் செய்து வரும் சத்தியமூர்த்தி விவசாயத் துறையிலும் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறார் தனது வீட்டின் மின்சார தேவைகளுக்கு முழுக்க முழுக்க சூரிய ஒளியை சார்ந்துள்ளார் அதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய சேமிப்பு ஆவதாக சொல்கிறார்.


