திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் உள்ள பராய்த்துறைநாதர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற திருத்தலமாகும்.
இந்த கோயில் உள்ள பராய் இலையை முறைப்படி உண்டு வந்தால் ஸ்டேஜ் 1 ஸ்டேஜ் 2 கேன்சர் குணமாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இங்குள்ள வராகியம்மனுக்கு ராகு காலத்தில் 48 வெள்ளிக்கிழமை விளக்கு போட்டால், விளக்கு ஏற்றினால் திருமண தோஷங்கள் நீங்கும்.
திருப்பங்கள் கோடி தரும் திருப்பராய்த்துறைநாதர் என்று அழைக்கப்படும் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை பராய்த்துறை நாதர் திருக்கோவிலுக்கு 29/08/2025 அன்று விமர்சியாக குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவிற்கு என அரசாங்கம் கிட்டத்தட்ட ரெண்டரை கோடி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆன நிலையில் இதற்கு முன்னால் இருந்த செயல் அலுவலர் ராகினி முறையாக எந்த ஒரு செயலையும் செய்யாமல், காலம் தாழ்த்திய ஏனோதானோ என்று பணி செய்து வந்ததாலும், கும்பாபிஷேக பணி செய்து வந்த ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் கிடைக்காததால் அவர்கள் வேலை எதுவும் செய்யவில்லை.
இந்த நிலையில் பல்வேறு புகார்களுக்கு உள்ளான செயல் அலுவலர் ராகினி உடனடியாக பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு அகிலா அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
பொறுப்பு ஏற்ற உடனேயே கோர்ட்டு உத்தரவு இருந்தும் அதை மதிக்காமல் வீட்டு வரி ரசீது வழங்கப்படாமல் இருந்த அம்பேத்கார் நகர் எக்ஸ்டென்ஸ் அண்ட் பிரிவில் வாழும் 15 நபர்களுக்கு வீட்டு வரி ரசீது போட்டுக் கொடுத்து, அடிப்படை வசதிகளுக்கான தடையின்மை சான்றிதழையும் வணங்கினார். இதன் காரணமாக மக்கள் இவரை நடமாடும் அகிலாண்டேஸ்வரி என அழைக்க ஆரம்பித்தனர்.
ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த பராய் துறை நாதர் திருக்கோயில் திருப்பணியை உடனடியாக ஒப்பந்தக்காரர்களுடன் பேசி அவர்களை பணி செய்ய ஊக்குவித்து அவர்களுக்கு பணம் வழங்கப்படாத நிலையில் செயல் அலுவலர் அகிலா மீது உள்ள நம்பிக்கையில் கடனுக்கு இந்த பணியை சிறப்பாக செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இன்று வரை திருப்பராய்த்துறையில் பணி செய்த ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்க வேண்டிய தொகை கிட்டத்தட்ட கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இவரை இந்த பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவித்தால் அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகை கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம் என்று ஒப்பந்தக்காரர்கள் புலம்புகிறார்கள்.
ஏனென்றால் அகிலா சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் இந்த கும்பாபிஷேக திருப்ப பணியை பணம் வாங்காமல் செய்து முடித்தோம். அவர் சென்று விட்டால் மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்றும் ராகினி போல் நடந்து கொண்டால் என்ன செய்வது என்றும் புலம்புகிறார்கள்.
சிறப்பாக செயல்படும் இந்த அகிலா அவர்களை அடியார்கள், மக்கள் கும்பாபிஷேக ராணி என்று அழைக்கிறார்கள். இன்று வரையில் இந்த ஏரியாவில் 12 கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள். வரும் 04/09/25ஆம் தேதி இவரது பொறுப்பில் உள்ள வட தீர்த்த நாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
16 வருடமாக திருப்பராய்த்துறை நந்தவனத்தில் வாழும் மக்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி அல்லல் படுகிறார்கள், கழிப்பறைக்கு ரயில்வே லைனை பயன்படுத்துகிறார்கள், குடிப்பதற்கு குடிநீர் இல்லை, மின்சாரம் இல்லாமல் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்ற விஷயம் புதிதாக பொறுப்பேற்ற திருச்சி மாவட்ட கலெக்டர் திரு சரவணன் ஐஏஎஸ் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டவுடன், உரிய நடவடிக்கையில் இறங்கிய ஆட்சித் தலைவர் அவர்களின் நேரடி கண்காணிப்பு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நந்தவன மக்களுக்கு விடிவு காலம் ஏற்படுவதற்கான முயற்சியில் இறங்கினார்.
அதன் அடிப்படையில் திரு அகிலா அவர்கள் இரவு பகலாக பணியாற்றி நந்தவன மக்களுக்கு அடிப்படை வசதி வழங்குவதற்கான கோப்பு நேரடியாக சென்னையில் வழங்கப்பட்டது. தற்பொழுது அந்த கோப்பு கையெழுத்து ஆகிவிட்டதாகவும் அகிலா இருந்தால் அந்த பணி உடனே முடிந்து விடும் என்பதாலும், நந்தவன மக்களுக்கு இந்த இடம் கிடைக்கக்கூடாது என்ற நோக்கத்தில் திரை மறைவில் இயங்கி வரும் மிகப்பெரிய சக்தி இதை இழுக்கடிப்பதற்காகவே அகிலா உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று தெரிய வருகிறது.
செயல் அலுவலர் ராகினி திருப்பராய்த்துறையில் இயங்கி வரும் தனியார் அறக்கட்டளை திருக்கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வந்திருந்தாலும் அவர்களை ஆக்கிரமிப்புதாரர்கள் இல்லை என்று கூறியிருந்தார். சட்டத்தின் முன் அரசனும் ஆண்டியும் ஒன்று என்ற அடிப்படையில் அகிலா அவர்களே அந்த அறக்கட்டளையை ஆக்கிரமிப்புகிறார்கள் என்று தெரிவித்தார், என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சென்னையில் இருந்து நமக்குத் தெரிய வந்த ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், தற்பொழுது பணி செய்யும் இடத்தில் அகிலா அவர்களின் பதவி காலம் முடிவடைந்து விட்டதாகவும், தனது குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர் திருப்பராய்த்துறை செயல் அலுவலர் பணியை தனக்கு வழங்குமாறு சொந்த காரணம் காட்டி விண்ணப்பித்திருந்தார் என்றும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.
எப்பொழுதும் போல் மீண்டும் நந்தவன மக்களுக்கு அடிமை வாடகை ரசீது வழங்காமல் காலம் தாழ்த்துவார்களோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
1 Comment
உங்கள் இதழ் RNI தருக வெளியீட்டாளர் முகவரி தருக தவறான தகவல் வருவது குறித்து தெரிவிக்க வேண்டும்