திருச்சியில் விரைவில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் வாட்ச் டவர்
திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி ஆற்றங்கரையில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவேற உள்ளது. ரூபாய் 37 கோடி செலவில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மற்றும் ஓடத்துறை என இரு இடங்களில் வாட்ச் டவருடன் கூடிய அழகிய ஆற்றங்கரை பூங்கா அமைக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திருச்சி மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கிடமாக ஸ்ரீரங்கம் சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் காவேரி பாலம்