தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அவரது 1350 வது சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் மாவட்ட கழக செயலாளரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள முத்தரையர் மணிமண்டபத்தில் அவரின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை
அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட அமைச்சர் கே என் நேரு
திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசுப்பொருட்காட்சியை இன்று தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார். நாள்தோறும் சாதனைகளை நிகழ்த்தி வரும் திராவிட மாடல் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை தொடங்கி வைத்து ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டார். அப்போது இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்
திருச்சி மாவட்டம் கீழரசூர் ஊராட்சி தென்னரசூர் பகுதியில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதி
மே 19 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் ஊராட்சியில் தென்னரசூர் பகுதியில் நேற்று இரவு கோடை கனமழையின் காரணமாக 2 மணி நேரம் விடாமல் பெய்த கோடைகால கனமழையின் காரணமாக கீழரசூர் ஊராட்சி தென்னரசூர் கிராமத்தில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இரவு நேரம் என்பதால் மின்சாரம் இல்லாமல் இடுப்பளவு தண்ணீரில் 10 க்கும் மேற்பட்ட வீடுககளில் உள்ள மக்கள் ஆகிவிட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகம் தீயணைப்புத் துறையினருக்கும்
அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி எழுதிய நூல் வெளியீடு – பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வாழ்த்து
தமிழ்நாட்டின் உரிமைக் குரலாய் ஒரு கல்விக் குரல் என்ற பெருமையோடு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” என்ற தனது நூலினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் கரங்களால் வெளியிட உள்ளார். இந்நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை இன்று சென்னை அண்ணா நகர் இல்லத்திற்கு
பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே என் நேரு
மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்கள் இன்று(26.04.2025) பஞ்சப்பூர். ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார்கள் .
ஊழலின் ஊற்று கண்ணாக திகழும் கிராம ஊராட்சி செயலாளர்
திருச்சியில் ஊராட்சி நிதியில் பல லட்சம் முறைகேடு செய்த திருமலைசமுத்திரம் கிராம ஊராட்சி செயலாளர் இளங்கோ மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், திருமலைசமுத்திரம் குக்கிராமத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ்ஐல் ஜீவன் மிஷன் – 2022-23 திட்டத்தில் ரூபாய் 10.25 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 130 வீடுகளுக்கு பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல் மற்றும் குடிநீர் குழாய்
கோயில் நிலத்தில் குடியிருந்தால் மின் இணைப்பு இல்லை- அமைச்சர் சேகர்பாபு
கோயில் நிலத்தில் குடியிருந்தால் மின் இணைப்பு இல்லை சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு சட்டசபையில் மரபுசாரா எரி சக்தி மற்றும் மதுவிலக்குத்துறை மானியக்கோரிக்கை மீது நேற்று. நடந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் அசன் மவுலானா பேசும்போது, “மின்சாரம் மிக முக்கியமானது. எல்லாருக்கும் மின்சாரம் கிடைக் கும் நிலை வரவேண்டும். எனது தொகுதியில் மேய்க்கால் புறம் போக்கு, கிராமநத்தம் பகுதிகளில் வீடு கட்டியவர்களுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட எல்லா இணைப்புகளும் கிடைத்தி ருக்
கோயில் அன்னதானத்தில் தொற்று பிரச்னையா? அமைச்சர் நேருவுக்கு இந்து முன்னணி கண்டனம்.
திருப்பூர், ஏப். 23- இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சி உறையூரில் குடிநீரில் டிநீரில் கழிவுநீர் கலந்த பிரச்னையில், பாதிக்கப்பட்டோர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். இந்தப் பிரச்னை தொடர்பாக ஏப்ரல் 21ல் சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் நேரு, “குடிநீரில் பிரச்னை இல்லை. திருச்சி உறை யூர் வெக்காளியம்மன் கோயிலின் அன்னதானம். இலவசமாக பானங்கள் வழியாக தொற்று ஏற்பட்டு இருக்கலாம்” என்றார். அவரது கருத்தை
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் திருச்சி மேயர் அன்பழகன் மனுக்களை பரிசீலனை செய்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (21.04.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் திரு.வே. சரவணன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா, மண்டத் தலைவர்கள் திருமதி. துர்காதேவி , திருமதி. விஜயலட்சுமி, கண்ணன் ,
இரவில் தொடரும் மின்வெட்டு புழுக்கத்தில் நொந்து தவிக்கும் ஶ்ரீரங்கம் மக்கள்
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் நகரில் தினமும் இரவு 10:30 க்கு தொடங்கும் மின்வெட்டு நள்ளிரவு 12 மணி வரை நீள்கிறது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை எரிச்சலும் வேதனையும் பட வைக்கின்றது. ஒரு புறம் கடுமையான கோடையின் புழுக்கம் மறுபுறம் ஶ்ரீரங்கத்தில் பாரம்பரியமான கொசுக்களின் ரீங்காரம் மற்றும் குருதி கொடை. இவற்றுக்கு சிகரம் வைத்தது போல நமது மின் வாரியத்தின் அறிவிக்கப்படாத மின்வெட்டு. தினம் தினம் உறங்கும் வேளையில் சித்ரவதை