4 நாட்களில் 50 கோடி – வசூலிலும் வரவேற்பு பெற்ற வீரதீரசூரன்.
விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வீரதீரசூரன். விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கிறார். விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பிரசன்னா கவனித்திருக்கிறார்.இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகவிருக்கிறது.