கண்ணியமான அரசியலுக்கும், களங்கமற்ற தலைமைக்கும் தோள் கொடுங்கள். ஆதாயமில்லா மக்கள் பணிக்கும், சமரசமில்லா மக்கள் நலனுக்கும் கரம் கொடுங்கள்
நான்கே நான்கு ஆசை வார்த்தைகள் கூறினால், ஆயிரமாயிரம் பேர்கள் அணி திரள்வார்கள் என்ற நிலையில், தலைவர் வைகோ அவர்கள் தனது பயணத்தை தெளிவாக வரையறுத்தார், “என்னோடு வந்தால் பட்டமோ பதவியோ கிடைக்காது. இது முள்ளும் கல்லும் நிறைந்த பாதை. செந்நீரும் கண்ணீரும் சிந்த நேரிடும். சிறைச்சாலைக்கும் செல்ல நேரிடும். அதற்கு சித்தமானவர்கள் மட்டும் என் பின்னால் வாருங்கள்.”என்று கூறி, திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையுள்ள தூணாக, மாபெரும் இயக்கமாக மறுமலர்ச்சி
திருச்சி பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை நேரில் கள ஆய்வு செய்த துரை வைகோ
திருச்சி பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை உள்ள தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விளக்குகள் சரிவர எரிவதில்லை, அதனால் தொடர் விபத்துகள் நடப்பதாக வந்த குற்றச்சாட்டு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ அவர்களின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மண்டல அலுவலருக்கு கடந்த வாரம் கோரிக்கை வைத்தார் . மேலும் அது குறித்து தஞ்சையில் உள்ள NHAI திட்ட இயக்குனரிடம் தகவல் கொடுத்தார். அப்போது,
அனுபவங்கள் உணர்த்தும் பாடம்.!
கோவில்பட்டியில் இருந்து திருவேங்கடம் செல்லும் வழியில் மைப்பாறை கிராமம் உள்ளது. அங்கே எழில் கொஞ்சும் அழகிய மலை ஒன்று இருக்கிறது. . கடந்த 08.12.2021 அன்று கழகத் தோழர்களுடன் அந்த மலைக்கு சென்று, அரச மர பூங்கா அமைக்கும் கனவில் முன்னூறுக்கும் மேற்பட்ட அரச மரக் கன்றுகளை நட்டேன். இருக்கின்ற மரங்களிலேயே அரச மரத்திற்கு தனிச் சிறப்புகள் பல உண்டு. அதிக அளவில் உயிர்க்காற்றை உற்பத்தி செய்யும் ஆற்றல் அரச
தொகுதி மக்களின் தேவைகளுக்காக மாவட்ட கலெக்டர் உடன் உரையாடிய பாராளுமன்ற உறுப்பினர்
இன்று (19.05.2025) மாலை 4 மணியளவில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி தொகுதியில் உள்ள, வாசன் வேலி (Vasan Valley) குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளோடு, அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் இ.ஆ.ப அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். அதுகுறித்த பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார். அத்துடன் மற்ற கோரிக்கைகளையும் வழங்கி அதுகுறித்த
ஸ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ
இன்று (19.05.2025) காலை 11 மணியளவில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி ஶ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்கள் டாக்டர். அருட்செல்வம், டாக்டர். பொன்மலர், டாக்டர். இளவரசன், டாக்டர். முருகன் ஆகியோர் உடனிருந்தனர். துரை வைகோ அவர்களிடம் பேசும்போது, ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு மக்களிடம் நல்ல பெயர் இருப்பதை சுட்டிக்காட்டி, அதற்கு அவர்களின்
15 ஆண்டுகால வாழ்க்கை போராட்டம்- துரை வைகோ அவர்களால் விடியல் பெறும் கிராம மக்கள்
நந்தவனம் குடியிருப்புவாசிகளுக்கு அடிமனை வாடகை ரசீது வழங்கிட திருச்சி எம்.பி. துரை வைகோ கோரிக்கை -அறநிலையத் துறை அமைச்சருக்குக் கடிதம். திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருப்பராய்த்துறை ஊராட்சி, நந்தவனம் அருள்மிகு தாருகாவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சர்வே எண் 172/2-இல் 35 குடும்பங்கள் சிறிய வீடுகள் அமைத்து, கடந்த பதினைந்து வருடங்களாக வசித்து வருகின்றனர். இக்குடியிருப்புகளில் சுமார் நூறு பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை
தமிழக அரசின் நூலக ஆணையை பெற்ற சங்கொலி வார இதழ்
கடந்த 31 ஆண்டுகளாக தமிழக பத்திரிகை வரலாற்றில் தனித்த அரசியல் அடையாளத்தோடு, தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வார ஏடான சங்கொலி இதழுக்கு, முதன்முதலாக தமிழக அரசின் நூலக ஆணையை பெற்றுக் கொடுத்துள்ளேன். அதற்காகப் பெருமை கொள்கிறேன். நான், நேரடி அரசியலுக்கு வந்த இந்த குறுகிய நான்காண்டு காலத்தில் சங்கொலிக்காக மேற்கொண்ட எனது தொடர் முயற்சிகள் 2022 ஆம் ஆண்டு தொடங்கியவை. 10.12.2022 அன்று
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒளி மிகுந்த விளக்குகள் அமைக்க கோரிக்கை – திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அறிக்கை
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை) போதிய சாலை விளக்குகள் இல்லை. அதனால் அந்த இடம் இருள் சூழ்ந்த இடமாக காட்சி தருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மண்டல அலுவலருக்கு நேற்று (13.05.2025) கோரிக்கை கடிதம் எழுதினேன். அது குறித்து இன்று (14.05.2025) தஞ்சையில் உள்ள NHAI திட்ட
அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி எழுதிய நூல் வெளியீடு – பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வாழ்த்து
தமிழ்நாட்டின் உரிமைக் குரலாய் ஒரு கல்விக் குரல் என்ற பெருமையோடு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” என்ற தனது நூலினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் கரங்களால் வெளியிட உள்ளார். இந்நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை இன்று சென்னை அண்ணா நகர் இல்லத்திற்கு
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அறிக்கை
திருச்சி கோட்டை இரயில் நிலையத்தின் அருகில் உள்ள பழைய மேரிஸ் மேம்பாலத்தை இடிக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொய்வாக இருந்துவருவதை சுட்டிக்காட்டி, கடந்த 23.04.2025 அன்று தென்னக இயில்வே பொது மேலாளர் தலைமையில், திருச்சியில் நடைபெற்ற தென்னக இரயில்வே திருச்சி கோட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசினேன். இதனை வலியுறுத்தி எழுத்துப்பூர்வமாகவும் கோரிக்கை அளித்தேன். அப்போது பதிலளித்து பேசிய தென்னக இரயில்வே பொது மேலாளர் வருகின்ற



