கொண்ட கொள்கையில் சற்றும் பின் வாங்காத மனிதர்!
மக்கள் பணியே மகேசன் பணி என்கின்ற பழமொழி தமிழகத்தில் மிகவும் பிரபலம். அதைப்போலவே கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் எனக்கு வாக்களியுங்கள் என்று அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டு வாக்காளர்களை சந்திப்பதும் வெற்றி பெற்ற பிறகு மைக் வைத்து கூப்பிட்டால் கூட தொகுதி பக்கம் வராமல் இருப்பதும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. ஆனால் தன்னை பெரு வெற்றி பெற செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தொகுதி
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா- மாவட்ட ஆட்சியர், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து நடத்தும் சமூக வலுவூட்டல் முகாம் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (29.05.2025) திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்கள் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ எம்.பி., அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்கள்.
திருச்சியில் விரைவில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் வாட்ச் டவர்
திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி ஆற்றங்கரையில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவேற உள்ளது. ரூபாய் 37 கோடி செலவில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மற்றும் ஓடத்துறை என இரு இடங்களில் வாட்ச் டவருடன் கூடிய அழகிய ஆற்றங்கரை பூங்கா அமைக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திருச்சி மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கிடமாக ஸ்ரீரங்கம் சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் காவேரி பாலம்
திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா
திருச்சி, மே. 29- திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பெரியார் நகர் அருகிலுள்ள சித்தர் சக்தி பீடம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா மற்றும் இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.இதையொட்டிஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்குபூதட்டு, இளநீர் கொடுத்து அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைநிர்வாக குழு செயலாளர்சிவகுமார், தவமணி, அமுதா வெங்கடேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.
BREAKING: ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு. மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு. பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் புரிந்துள்ளார் ஞானசேகரன் அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – காவல்துறை தரப்பு கோரிக்கை அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்
விஜய் ஆண்டனி-இயக்குநர் சசி: மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ வெற்றிக் கூட்டணி
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியும் அவரது தங்கை மகன் அஜய் திஷானும் நாயகர்களாக நடிக்கிறார்கள்**சசி இயக்கிய ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ வெற்றிப் படத்தை தயாரித்த அபிஷேக் ஃபிலிம்ஸ் இரமேஷ் P. பிள்ளை புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறார். மாபெரும் வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைகிறது. இரட்டை நாயகர்கள் கொண்ட கதையாக உருவாகவுள்ள இந்த
திருச்சி மாநகர காவல்துறை- பத்திரிக்கை செய்தி.
26.05.2025. காவல்துறையில் பணியாற்றுவதாக கூறி ஏமாற்றி பணத்தை பெற்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.. திருச்சி மாநகர அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டீ கடையில் வேலை செய்யும் நபரிடம், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எதிரி ஜெத்ரோ ஷியாம் வயது 24, த.பெ.சாலமன் ராஜா என்பவர் தான் ஒரு போலீஸ்காரர் என அறிமுகம் செய்துக்கொண்டும் காவல்துறையினரால் ஏலத்தில் விடப்படும் இருசக்கர வாகனத்தை குறைந்த விலையில்
தென்பரை இலவச பயிற்சி மையம் சார்பில் அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான பயிற்சி
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் தென்பரை ஊராட்சியில் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் போட்டித்தேர்வை எளிதாக எதிர்கொண்டு அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான பயிற்சியைத் தென்பரை இலவச பயிற்சி மையம் 2016 செப்டம்பர் முதல் வழங்கி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டித் தேர்வர்களுக்கு இம்மையத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 2017 – 18 ஆம் ஆண்டில் முதன் முதலாக கற்பகநாதர்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரெ.அமுதா என்பவர் டிஎன்பிஎஸ்ஸி
*ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சிக்கு 30 சட்டமன்ற தொகுதி வழங்கும் கட்சியுடன் கூட்டணி – நிறுவன தலைவர் குணசேகரன் பேட்டி*
ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நிறுவன தலைவர் குணசேகரன் தலைமையில் திருச்சி புத்தூர் பெரியார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாநில , மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த நிறுவன தலைவர் குணசேகரன் கூறும்போது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சிக்கு 30 சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்கிறார்களோ அவர்களிடம்
மதுரையில் முருக பக்தர் மாநாடு யோகி, பவன் கல்யாண் பங்கேற்பு
மதுரையில் வரும் ஜூன் 22ல் ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட் டில் சிறப்பு அழைப்பாளர்களாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஹிந்து முன்னணி சார்பில், ‘குன்றம் காக்க… கோவிலை காக்க’ என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது . கடந்த ஒன்றரை