ஒரு தேங்காய் பண்ணு கூட சாப்பிட வசதியில்லாத நான்… – கண்ணீர் மல்கிய சூரி!
நான் எட்டாவது படிக்கும்போது, ரொம்ப வறுமை, வேற வழியில்லாம எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு திருப்பூர் வந்துட்டேன். அப்போ எனக்கு ஒரு நாளைக்குக் கிடைச்ச கூலி வெறும் 20 ரூபாய் தான். ஒரு வாரத்துக்கு உழைச்சா 140 ரூபாய் கிடைக்கும். அதுல பாதி வீட்டுக்கு அனுப்பிட்டு, மீதி காசுல என் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாம தவிச்சிருக்கேன்.அந்த சமயத்துல, திருப்பூர்ல கிடைக்கிற ஒரு சின்ன தேங்காய் பண்ணை சாப்பிடணும்னு எனக்கு எவ்வளோ
திருச்சி மாவட்டம் கீழரசூர் ஊராட்சி தென்னரசூர் பகுதியில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதி
மே 19 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் ஊராட்சியில் தென்னரசூர் பகுதியில் நேற்று இரவு கோடை கனமழையின் காரணமாக 2 மணி நேரம் விடாமல் பெய்த கோடைகால கனமழையின் காரணமாக கீழரசூர் ஊராட்சி தென்னரசூர் கிராமத்தில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இரவு நேரம் என்பதால் மின்சாரம் இல்லாமல் இடுப்பளவு தண்ணீரில் 10 க்கும் மேற்பட்ட வீடுககளில் உள்ள மக்கள் ஆகிவிட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகம் தீயணைப்புத் துறையினருக்கும்
ஸ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ
இன்று (19.05.2025) காலை 11 மணியளவில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி ஶ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்கள் டாக்டர். அருட்செல்வம், டாக்டர். பொன்மலர், டாக்டர். இளவரசன், டாக்டர். முருகன் ஆகியோர் உடனிருந்தனர். துரை வைகோ அவர்களிடம் பேசும்போது, ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு மக்களிடம் நல்ல பெயர் இருப்பதை சுட்டிக்காட்டி, அதற்கு அவர்களின்
திருச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுசரித்த தமிழக வெற்றி கழகத்தினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த ஈழத் தமிழர்களின் நினைவாக, வருடம் தோறும் மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு நிகழ்ச்சி நடத்த அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட சார்பில் திருச்சி வயலூரில் உள்ள விஜய் மஹாலில்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த
பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கும் ஆஞ்சியோகிராபி சிகிச்சைகள்: திருச்சி மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டி சாதனை
● 48 மணி நேரமே ஆன, 2 கிலோ எடையுள்ள, பச்சிளம் குழந்தைக்கு உயிர்காக்கும் பலூன் பல்மோனரி வால்வுலோபிளாஸ்டி செய்யப்பட்டது● 11 நாட்களே ஆன, 1.5 கிலோ எடையுள்ள மற்றொரு பச்சிளம் குழந்தைக்கு 4×2 மிமீ அளவுள்ள ஒரு சிறிய சாதனம் பொருத்தப்பட்டு அதன் இதயத்தில் இருந்த அசாதாரண இரத்த நாளம் சரிசெய்யப்பட்டது. திருச்சி, மே 15, 2025:தென் தமிழகத்தில்முதன்முறையாக பிறந்த சில நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளுக்கு
தள்ளாடும் தார் சாலைகள். அவதிக்குள்ளாகும் கிராம மக்கள்
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தரசநல்லூர் தாமரைக் குளம் பகுதியில் முழுமையான சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமாக மோசமாக பல வருடங்களாக இந்தச் சாலை இப்படித்தான் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மழைக்காலங்களில் குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
15 ஆண்டுகால வாழ்க்கை போராட்டம்- துரை வைகோ அவர்களால் விடியல் பெறும் கிராம மக்கள்
நந்தவனம் குடியிருப்புவாசிகளுக்கு அடிமனை வாடகை ரசீது வழங்கிட திருச்சி எம்.பி. துரை வைகோ கோரிக்கை -அறநிலையத் துறை அமைச்சருக்குக் கடிதம். திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருப்பராய்த்துறை ஊராட்சி, நந்தவனம் அருள்மிகு தாருகாவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சர்வே எண் 172/2-இல் 35 குடும்பங்கள் சிறிய வீடுகள் அமைத்து, கடந்த பதினைந்து வருடங்களாக வசித்து வருகின்றனர். இக்குடியிருப்புகளில் சுமார் நூறு பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை
தமிழக அரசின் நூலக ஆணையை பெற்ற சங்கொலி வார இதழ்
கடந்த 31 ஆண்டுகளாக தமிழக பத்திரிகை வரலாற்றில் தனித்த அரசியல் அடையாளத்தோடு, தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வார ஏடான சங்கொலி இதழுக்கு, முதன்முதலாக தமிழக அரசின் நூலக ஆணையை பெற்றுக் கொடுத்துள்ளேன். அதற்காகப் பெருமை கொள்கிறேன். நான், நேரடி அரசியலுக்கு வந்த இந்த குறுகிய நான்காண்டு காலத்தில் சங்கொலிக்காக மேற்கொண்ட எனது தொடர் முயற்சிகள் 2022 ஆம் ஆண்டு தொடங்கியவை. 10.12.2022 அன்று
கட்சிக் கொடி கம்பங்களை அகற்றுவது யார் ? அரசு துறைகளுக்கிடையே போட்டா போட்டி?
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள எந்த அதிகாரிகளும் இதுவரை பின்பற்றவில்லை. அனைத்து கட்சி கொடிகளும் ரோட்டில் ஓரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் ஸ்ரீரங்கம் TV Koil பகுதிகளில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.இது போன்ற ஆபத்தான இடங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் தெருக்களின் மூலைப் பகுதிகளில் கார்னரில் பொது பயன்பாட்டுக்கு
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒளி மிகுந்த விளக்குகள் அமைக்க கோரிக்கை – திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அறிக்கை
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை) போதிய சாலை விளக்குகள் இல்லை. அதனால் அந்த இடம் இருள் சூழ்ந்த இடமாக காட்சி தருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மண்டல அலுவலருக்கு நேற்று (13.05.2025) கோரிக்கை கடிதம் எழுதினேன். அது குறித்து இன்று (14.05.2025) தஞ்சையில் உள்ள NHAI திட்ட