New Trichy Times

Current Date and Time
Loading...

காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

அமைச்சர் கே.என். நேரு உறுதி

திருச்சி, மே.08-

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் அனைத்து நிர்வாகிகள் அமைச்சர் கே.என். நேருவை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாளை மறுநாள் (9-ந்தேதி)தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்புவிழா மற்றும் அறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் திறப்புவிழா ஆகியவற்றிற்கு எங்களது காந்திமார்க்கெட் வியாபாரிகளின் கூட்டமைப்பு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், அதே நாளில் (9-ந் தேதி) பஞ்சப்பூர் பசுமை பூங்காவில், புதிதாக அமையவுள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ள தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தின் எங்களது அமைச்சர் கே.என்.நேரு தாங்களையும் வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால்
திருச்சி காந்திமார்க்கெட்டில் 25 வியாபார சங்கங்கள் ஒன்றிணைந்து உருவாகியுள்ள எங்களது வியாபார கூட்டமைப்பின் நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து, சுமார் 2300 மொத்தம் & சில்லரை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்றவாறு நல்ல விசாலமான வசதிகளுடன் கூடிய கடைகள் அமைத்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்றி தருவோம் என அமைச்சர் கே.என்.நேரு உறுதிபட தெரிவித்தார்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு வியாபாரிகளிடம் கூறியதாவது:-
திருச்சி காந்தி மார்க்கெட் தொடர்ந்து இங்கேயே செயல்படும்.
பஞ்சப்பூர்
புதிய காய்கறி மார்க்கெட் கள்ளிக்குடி மார்க்கெட் போல் அமைந்து விடாது.
9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) புதிய மார்க்கெட்டிற்கு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய பிறகு உங்களை (வியாபாரிகள்)கலந்து ஆலோசித்த பிறகு தான் புதிய மார்க்கெட்டில் கடைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
அமைச்சர் கே.என்.நேருவின் அறிவிப்புக்கு திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பினர்
தங்களது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன்,தமிழக அரசுக்கும்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும்,
அமைச்சர் கே.என்.நேருவுக்கும்
நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD