திருச்சிராப்பள்ளி ஸ்பாஸ்டிக்ஸ்சொசைட்டியின் ஆண்டு விழாவில் பன்னாட்டு ரோட்டரி இயககுனா தேர்வு திரு M.முருகானந்தம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் விழாவில் சிறப்புரையாற்றிய அவர் ஸ்பாஸ்டிக்ஸ்சொசைட்டியின் நிர்வாகிகளின் சேவையை பாராட்டினார் மேலும் ரோட்டரி நியூஸ் டிரஸ்ட் சமீபத்தில் இவாகளுக்கு ரூபாய 5 லட்சம் வழங்கியதையும் பாராட்டி பேசினார்

இந்நிகழ்ச்சியைத் ஸ்பாஸ்டிகஸ்சொசைட்டிவளாகத்தில் பத்திரிகையாளர்களை திரு. முருகானந்தம் சந்தித்தார் அதில ரோட்டரியின் உலகளாவிய தொலைநோக்கு. வரவிருக்கும் லீட்2025 தலைமைத்து மாநாடு மற்றும் சிகாகோவில் நடைபெற்ற சமீபத்திய கவுன்சில் கூட்டத்தின் முக்கிய புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
லீட்2025 ரோட்டரி இந்தியா தலைமைத்துவ மாநாடு அறிவிப்பில் 1905ல் தோற்றுவிக்கப்பட்ட பன்னாட்டு ரோட்டரியின் முக்கிய மதிப்புகளில் ஒன்று தலைமைப்பணபு வளர்த்தல். இதனை கொண்டாடும் விதமாக லீட்2025 என்ற பெயரில் மிக பிரம்மாண்டமான ரோட்டரி இந்தியா தலைமைத்துவ மாநாடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை 3 நாள் நிகழ்வாக சென்னை நந்தம்பாக்கமடிரேட் சென்டரில்நடைபெறவுள்ளதாக திரு முருகானந்தம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, நேபால், பூட்டான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளிலிருந்து 5000ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இம்மாநாட்டின் துவக்க விழாவிற்கு தமிழ்நாட்டின் மாணபுமிரு துணை முதலமைச்சர் திரு உதயநிதிஸ்டாலின் முதன்மை விருந்தினராகவும், மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் திரு அன்பிலமகேஷ் பொய்யாமொழி அவர்கள் கௌரவவிருந்தினராகவும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதுமாநாட்டின் இறுதி நாள் விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள மாண்புமிகு இந்திய ஜனாதிபதியை அணுகியுள்ளதாக முருகானந்தம் தெரிவித்தார்.
பிரேசிலைச் சேர்ந்த பன்னாட்டுரோட்டரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள: மாரியோசீசாமார்ட்டின்ஸ்டிகமார்கோ, பல முன்னாள் மற்றும் தற்போதைய பன்னாட்டு ரோட்டரி இயக்குநர்கள் மற்றும் தலைவாகளும் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.