NTT TAMIL

Current Date and Time
Loading...

இன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மாவட்ட தலைநகரங்களில் மாலை நேரம் கருணா ஆனது நடைபெற்றது கூட்டத்தில் அவர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்மொழிந்து கோஷமிட்டனர்.‎

தேர்தல் கால வாக்குறுதிகளான சிறப்பு கால முறை ஊதியம் மாற்றி காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் ‎

குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூபாய் 9000 வழங்க வேண்டும் ‎பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்.‎‎

உணவூட்டு செலவீனம் ஒரு குழந்தைக்கு ரூ.5/- வழங்க வேண்டும்.‎‎63 ஆயிரம் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடன் நிரப்பிட வேண்டும்.‎‎

தொகுப்பூதிய அரசாணை எண். 95 ரத்து செய்து கால முறை ஊதியத்தில் வெளியிட வேண்டும்.‎‎

ஓய்வு பெறும் நாளிலே ஓய்வுகால பணப்பலன்களை வழங்கிட வேண்டும்.‎‎சமூக தணிக்கை ரத்து செய்ய வேண்டும்.

உள்ளாட்சி தணிக்கையை தொடர வேண்டும்.‎‎கொரானா காலத்து உணவுப்பொருட்களை பதிவேட்டிலிருந்து ரத்து செய்ய வேண்டும்.‎‎

சமையல் உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வும், அமைப்பாளர் பதவி உயர்வும் வழங்கிட வேண்டும்.‎‎

10/20/30 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு சிறப்பு தேக்க நிலை ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் .என பல கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பி மாலை நேர தர்ணாவில் ஈடுபட்டனர். ‎டி. அமுதா மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். ‎ஆர்.சாந்தி மாநில செயற்குழு உறுப்பினர் வரவேற்புரை ஆற்றினார் .‎எம். சந்திரா, எம் .சாந்தி, ஆர் .பிச்சாயி மாவட்டத் துணைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஏ . பெரியசாமி மாநிலத் துணைத் தலைவர் மாலை நேர தர்ணாவை துவக்கி வைத்தார் . ‎ஐ. அல்போன்ஸா மாவட்டச் செயலாளர் அவர்கள் கோரிக்கை விளக்க உரை அளித்தார். ‎

நிறைவாக முனைவர் கே பால்பாண்டி மாவட்ட தலைவர் நிறைவுரை ஆற்றினார் .‎எஸ். கிரேஸ் லில்லி மாவட்ட பொருளாளர் நன்றி உரையாற்றினார் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts

POST MY ADD