New Trichy Times

Current Date and Time
7/24/2025 5:07:06 PM

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கைகள் கொடுத்து கலந்துரையாடினார்.

சஞ்சீவி நகர் இரயில்வே சுரங்கப்பாதை கோரிக்கை சம்பந்தமாக நேற்று (10.05.2025) காலை 8 மணியளவில் நான் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்த வாய்ப்புகள் குறித்து, திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்ததுடன், அதற்கான வரைபடங்களை காட்டி விளக்கம் அளித்தார்.

அப்போதே, சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள இரயில்வே கிராஷிங்கில் தனது கோரிக்கையை ஏற்று சுரங்கப்பாதை அமைக்க வாய்ப்புள்ளதாக கூறினார்கள். இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு நன்றி தெரிவித்துக்கொண்டார்.. அத்துடன், திருச்சி இரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் (ஆண், பெண் இருவருக்கும்) தாங்கள் இலவசமாக பயன்படுத்துவதற்கு கழிவறைகள் மற்றும் ஓய்வெடுக்க ஒரு நிழற்குடையும் அமைத்துத்தர வேண்டும் என்று, கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி திருச்சி இரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது ஆட்டோ சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

இரயில்வே கோட்ட மேலாளரை துரை வைகோ சந்திக்க உள்ள தகவல் அறிந்து, இரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் அவரை சந்தித்து அக்கோரிக்கைகள் சம்பந்தமாக மனு கொடுத்தனர்.

அவர்களின் இந்த கோரிக்கைகள் குறித்தும் DRM அவர்களிடம் கடிதம் கொடுத்து. பரிசீலிப்பதாக கூறினார். இந்நிகழ்வில், துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் திருச்சி மாநகர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் தெற்கு மணவை தமிழ் மாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் துரை வடிவேல், வைகோ அவர்களின் உதவியாளர் வெ. அடைக்கலம் பகுதிச் செயலாளர்கள் ஏர்போர்ட் வினோத், உறையூர் ஆசிரியர் முருகன், ஜங்ஷன் செல்லத்துரை, கந்தப்பன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ராமன், இளைஞர் அணி விக்கி ஆகியோர் உடனிருந்தனர்.

.#TrichyRailways#vaiko #trichymp #MKStalin #UdhayanidhiStalin #EVVelu #DuraiVaiko #AnbilMaheshPoyyamozhi #dmk #CMOTamilNadu #SoniaGanthi #RahulGanthi #PriyankaGandhi #Congress #INDIA #இந்தியாலைன்ஸ்#NewTrichyTimes

About Author
admin
View All Articles
Check latest article from this author !
வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக திருச்சி எஸ் டி பி ஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி பொன்மலையில் வந்தே பாரத் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் வசதி துரை வைகோ எம்பி நன்றி அறிக்கை
திருச்சி திருப்பதி இடையே பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திருச்சிராப்பள்ளி மக்களின் நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் துரை வைகோ எம்பி மனு
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை உரை – பார்லிமென்ட் tiger குரல் இனி நாடாளுமன்ற அவைகளில் ஒலிக்காது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD