
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர். நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பெயரில் இன்று திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் சந்திரா தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வக்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டன முழக்கமிட்டு உரையாற்றினர் அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்டம் செயலாளர் சந்திரா இணை செயலாளர் சிவா பொருளாளர் பாபு துணைச் செயலாளர் சாந்த ஷீலா ஆனந்த் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அணிகளின் சார்பாகவும் மேலும் பகுதி ஒன்றியம் பேரூராட்சி வார்டு கிளை சார்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

1 Comment
Good