NTT TAMIL

Current Date and Time
Loading...

திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக போற்றப்படுகின்ற ஸ்தலமாகும்.

இந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஈசனை வணங்குவதற்காக வருவது வாடிக்கை.

நவராத்திரி உற்சவம் பத்து நாளும் அகிலாண்டேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதும் வழக்கம். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலுக்கு முறையான தோரண வாயில்களோ அல்லது அடையாளம் காட்டும் வகையிலான வழிகாட்டு பலகைகளோ இல்லாதது பக்தர்களுக்கு கோவிலுக்கு செல்லும் வழியை கண்டறிவதில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் இதை தனது கவனத்தில் எடுத்துக் கொண்ட மாமன்ற உறுப்பினர் அபிஸ் முத்துக்குமார் இது தொடர்பாக மக்கள் மன்றத்தில் மாநகர மேயர் அன்பழகன் இடம் தோரணவாயில் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சூழலில் இன்று காலை அபிஸ் முத்துக்குமார் தன்னுடைய சொந்த முயற்சியில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு வரும் வழிகளை குறிப்பிடும் படியான அடையாள பலகைகளை கோவிலுக்கு வரும் நான்கு புறங்களிலும் மட்டுமல்லாமல் திருச்சி சென்னை புறவழிச்சாலையில் உள்ள வழி தடத்திலும் அமைத்துள்ளார்.

மாமன்ற உறுப்பினர் அபிஸ் முத்துக்குமார் அவர்களின் இந்த மக்கள் சேவையை திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களும் மனதார பாராட்டுகின்றனர்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் திரு அபிஸ் முத்துக்குமார் அவர்களை நியூ திருச்சி டைம்ஸ் மனதார பாராட்டுகின்றது.

Related Posts

POST MY ADD