வைகோ பிரச்சாரப் பயணம்
தமிழகத்தின் எட்டு இடங்களில் நம் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின் பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கழகக் கண்மணிகள், தமிழக உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள், தமிழ்நாட்டின் மீது அடங்காப் பற்றுக் கொண்டவர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டிட கழக நிர்வாகிகள் தக்க ஏற்பாடுகளைச் செய்வார்கள்.
2025 ஆகஸ்டு 9, இடம் – தூத்துக்குடி, பொருள்: ஸ்டெர்லைட் வெளியேற்றம்
தலைமை: வழக்கறிஞர் வெற்றிவேல்
வரவேற்புரை: ஆர்.எஸ்.ரமேஷ் (மா.செ.)
2025 ஆகஸ்டு 10, இடம்: கடையநல்லூர், பொருள்: மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும்
தலைமை: தி.மு.இராசேந்திரன்
வரவேற்புரை: கே.எம்.ஏ.நிஜாம் (மா.செ.)
2025 ஆகஸ்டு 11, இடம்: கம்பம், பொருள்: முல்லைப் பெரியாறும்; நியூட்ரினோவும்
தலைமை: புதூர் மு.பூமிநாதன் எம்.எல்.ஏ.,
வரவேற்புரை: கம்பம் வி.எஸ்.கே.இராமகிருஷ்ணன் (மா.செ.)
2025 ஆகஸ்டு 12, இடம்: திண்டுக்கல், பொருள்: விவசாயிகள், மீனவர்கள் துயரம்
தலைமை: டாக்டர் ரொஹையா எம்.பி.பி.எஸ்.,
வரவேற்புரை: என்.செல்வராகவன் (மா.செ)
2025 ஆகஸ்டு 13, இடம்: கும்பகோணம், பொருள்: மேகதாதுவும், மீத்தேனும்
தலைமை: ஆடுதுறை இரா.முருகன்
வரவேற்புரை: பேராசிரியர் வி.தமிழ்ச்செல்வன் (மா.செ)
2025 ஆகஸ்டு 14, இடம்: நெய்வேலி, பொருள்: நெய்வேலி நிலக்கரி நிறுவனம்
தலைமை: செஞ்சி ஏ.கே.மணி
வரவேற்புரை: எம்.பிச்சை (மா.செ)
2025 ஆகஸ்டு 18, இடம்: திருப்பூர், பொருள்: இந்தி ஏகாதிபத்தியம்
தலைமை: ஆடிட்டர் அர்ஜூனராஜ்
வரவேற்புரை: ஆர்.நாகராஜ் (மா.செ)
2025 ஆகஸ்டு 19, இடம்: திருவான்மியூர், பொருள்: சமூக நீதியும்; திராவிட இயக்கமும்
தலைமை: டாக்டர் சி.கிருஷ்ணன் எம்.பி.பி.எஸ்.,
வரவேற்புரை: கே.கழககுமார் (மா.செ)
அனைத்துக் கூட்டங்களிலும் கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன் பி.இ., அவர்களும், கவிஞர் மணிவேந்தன் அவர்களும் உரையாற்றுவார்கள்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
25.07.2025