
துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, மதிமுக பொதுச் செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் முதன்முறையாக திருச்சி உழவர் சந்தையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு இன்று காலை 10.15 மணியளவில் வருகை தந்தார்.
அலுவலகத்திற்குள் நுழைந்த பிறகு அங்கே வைக்கப்பட்டு இருக்கிற திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வரைபடம் உள்ளிட்ட திருச்சியின் பழமையையும், சிறப்புகளையும் உள்ளடக்கிய படங்களை பார்வையிட்டு மகிழ்ந்தார். .

அதன்பிறகு, துரை வைகோ அறைக்கு வருகை தந்த தலைவர் வைகோ அவர்களை தனது இருக்கையில் அமர வைத்து விட்டு, தனது வெற்றிக்காகப் பாடுபட்ட துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் மாவட்டச் செயலாளர்களை இருக்கையில் அமர வைத்துவிட்டு தலைவரின் அருகில் நின்றவாரே நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக செயல்பாடுகளை அவரிடம் விளக்கினார் துரை வைகோ.

திருச்சி தொகுதிக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்கள் தன் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பாக இருந்து வருவதை எடுத்துக்கூறி, ஆனபோதும் 20 விழுக்காடு தான் தனக்கு நிறைவு. இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது என தலைவரிடம் தெரிவித்தார் துரை வைகோ..

அதைத்தொடர்ந்து, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் அவரது இயக்க திருச்சி மாவட்டத் தோழர்களுடன் அலுவலகம் வருகைதந்து தலைவர் வைகோ அவர்களிடம் உரையாடினார்.
தலைவர் வைகோ அவர்களோடு துரை வைகோ தாயாரும் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.

தலைவரின் வருகை தனக்கும், கழகத் தோழர்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது என உற்சாகமாக கூறினார் துரை வைகோ.
இறுதியாக நாடாளுன்ற உறுப்பினர் அலுவலக வரவேற்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த வருகை பதிவேட்டில் தனது கையொப்பத்தை பதிவு செய்துவிட்டு, ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்துவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

இந்நிகழ்வில், கழக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, புதுக்கோட்டை எஸ்.கே.கலியமூர்த்தி, திருச்சி தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி வடக்கு டி.டி.சி.சேரன், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கர சேதுபதி உள்ளிட்ட மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றார்கள்.


