
மறுமலர்ச்சி திமுகவின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி..!
தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்து வரும் வர்த்தக நகரமாக விளங்குகின்ற கோவில்பட்டியில் சென்னை – நெல்லை வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்ல வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்து வந்தது.
இது தொடர்பான கோரிக்கையோடு கடந்த 21.09.2024 அன்று ஒன்றிய இரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்விணி வைஷ்ணவ் அவர்களை, நம் கழகப் பொதுச்செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேரில் சந்திந்து கோவில்பட்டியில் வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்ல வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

அதற்கடுத்த நான்கே நாட்களில் 25.09.2024 அன்று மறுமலர்ச்சி திமுக சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்தி கோவில்பட்டியில் எனது தலைமையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பல்லாயிரம் பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டிப்பாக கோவில்பட்டியில் வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்லும். அதற்கான முயற்சிகளை மறுமலர்ச்சி திமுக முன்னெடுக்கும் என பேசினேன்.
கோவில்பட்டியில் வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்ல வேண்டும் என போராட்டம் நடத்திய ஒரே இயக்கம் மறுமலர்ச்சி திமுக மட்டும் தான்.
ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் மாண்புமிகு அஸ்விணி வைஷ்ணவ் அவர்களை 18.08.2025 அன்று, நான் நேரில் சந்தித்து இக்கோரிக்கையை நினைவூட்டி வலியுறுத்தினேன்.
இரயில்வே துறை அதிகாரிகளை சந்திக்க நேர்கின்ற போதெல்லாம் இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
தற்போது கோவில்பட்டியில் வந்தே பாரத் தொடர்வண்டி நின்று செல்லும் என்ற அறிவிப்பை இரயில்வே துறை வெளியிட்டு உள்ளது.
இது மறுமலர்ச்சி திமுகவின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி..!
கோவில்பட்டி மக்களின் குரலாக தலைவர் வைகோ அவர்களும், நானும் தொடர்ந்து இக்கோரிக்கையை ஒன்றிய இரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தி வந்தோம். தற்போது இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் மாண்புமிகு அஸ்விணி வைஷ்ணவ் அவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
அன்புடன்,
துரை வைகோ MP
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
03.10.2025


