ஸ்ரீ ராமர் திருஉருவப்படம் அவமதிப்பு கயவர்களை கைது செய்யக்கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டன ஆர்ப்பாட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு நவல்பட்டு பகுதியில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருவுருவப்படத்தை அவமரியாதை செய்த ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்கின்ற கள்வர் கூட்டத்தை கைது செய்ய வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் எம் ஐ இ டி கல்லூரி அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு

விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் சுதாகர் திலக் தலைமையில் VHP மாநில அமைப்புச் செயலாளர் பாலாஜி ,BJP பெரம்பலூர் மாவட்ட மாநில பார்வையாளர் இல.கண்ணன்,இந்து முன்னணி திருச்சி கோட்ட பொதுச் செயலாளர் குணசேகரன்,ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்,VHP மாநில பசு பாதுகாப்பு அமைப்பாளர் கே சசிகுமார்,மாநில பஜ்ரங்தள் இணை அமைப்பாளர் ஆனந்த் ,கோட்ட செயலாளர் எஸ் முருகேசன்,கோட்ட பொறுப்பாளர்கள் ராஜகோபால் சர்மா,வாளாடி சங்கர்,BJP மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, மாநில மகளிர் அணி துணைத் தலைவர் புவனேஸ்வரி,இந்து முன்னணி பொறுப்பாளர் மனோஜ்,குண்டூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் செந்தில்,Bks திருச்சி மாநகர் தலைவர் கௌரிசங்கர் பாஜக முன்னாள் ஊடகப்பிரிவு தலைவர் இந்திரன் வேங்கூர் கார்த்திக் உறையூர் மண்டல் தலைவர் ராஜேஷ் முன்னாள் பாஜக நிர்வாகி ரவிச்சந்திரன்,ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன் மாவட்ட இணை செயலாளர்கள் அழகு யுவராஜ்,பரமசிவம்,கார்த்தி,திருவரம்பூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜயராமன் பிரபாகரன் ஆகியோர் செய்தனர்.










