
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு திருவள்ளுவர் நகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சி குடிநீர் கிடைக்காமல் மக்கள் போராடி வந்தனர் பலமுறை மாநகராட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்து வந்தனர்

இந்த சூழலில் மாமன்ற தேர்தலில் 14வது வார்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் அவர்களின் கவனத்திற்கு மக்கள் கோரிக்கை வைத்தனர்

அரவிந்தன் அவர்கள் உடனடியாக அந்த இடத்தை பார்வையிட்டதோடு மாமன்ற கூட்டத்திலும் அந்த மக்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்தார் இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று திருவள்ளுவர் நகர் பகுதியில் மாநகராட்சி குடிநீர் குழாய் அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டு வேலைகள் துரிதமாக நடைபெற்ற வந்தது

மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் தினசரி பணி நடக்கும் அந்த இடத்திற்கு சென்று மேற்பார்வையிட்டதோடு வேலைகளையும் சுரிதப்படுத்தினார் அதன் பயனாக பூமி பூஜை போடப்பட்டு 20 நாட்களுக்குள்ளாகவே அந்த மக்களுக்கு மாநகராட்சி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு காவிரி குடிநீர் இன்னும் ஒரு சில தினங்களில் கிடைக்க இருக்கின்றது. மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் அவர்களின் மின்னல் வேக செயல்பாடுகளை மக்கள் மனதார பாராட்டுகின்றனர்
