
வில்லியம்ஸ் சாலையில் சென்டர் மீடியன் அமைக்க ஏன் இந்த பகீர் பிரயத்தனம்
திருச்சி மாநகராட்சியின் அலட்சிய போக்கால் வணிக வளாகங்களில் பார்கிங் இல்லாமலும்_ பார்கிங்கை பின்னாளில் வணிக உபயோகத்திற்காக மாற்றும் வணிக வளாகங்களால் சாலையோர பார்கிங் அதிகரித்து தினம், தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய திருச்சி மாநகராட்சி எந்த முயற்சியும் செய்யவில்லை. சாலை அகலபடுத்தும் பணியையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் எதிர்கால திட்டமிடாமல் சாலையை சுறுக்கும் பணியை முன்யோசனையில்லாமல் திருச்சி மாநகராட்சி மேற்கொள்கிறதா….??? என்று எண்ண தோன்றுகிறது.
உதாரணத்திற்கு திருச்சி கண்டோன்மென்ட்டிலுள்ள வில்லியம்ஸ் ரோட்டை பிரிக்கும் விதமாக சென்டர் மீடியன் அமைக்கும் பணி தற்பொழுது நடைபெறுகிறது. இதற்காக தற்பொழுது அமைக்கப்பட்ட புதிய தார்சாலையை பெயர்த்து, இந்த சாலையை மேலும் குறுக்கும் விதமாக பாரதிதாசன் சாலையிலுள்ளது போல் பூ செடிகள் அமைப்புடன் கூடிய சென்டர் மீடியன் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
எங்களை கேட்டால் இது மக்கள் வரி பணத்தை வீணடிக்கும் செயல் என்பதுடன் கூடுதல் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் எனலாம். மேலும் வில்லியம்ஸ் சாலையை இரண்டாக பிரிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தால் மிக சுலபமாக ரெடிமேட் சிமென்ட் தடுப்பு சுவர்களை அமைக்கலாம். இது போன்ற அமைப்பு தான் திருச்சி பேலஸ் தியேட்டர் அமைந்துள்ள மதுரை ரோட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செமென்ட் கான்கிரிட் தடுப்பு அமைப்பது மிக எளிது. மேலும் இதற்காக புதிதாக ஏற்படுத்தப்பட்ட சாலையை சேதபடுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் ஒரே இரவில் பணிகளை முடித்துவிடலாம். மேலும் சாலை எந்தவகையிலும் குறுகாது.
எங்களுக்கு இன்னமும் நம்பிக்கை உண்டு திருச்சி மாநகராட்சி மக்களுக்கானது என்று…..!!!! ஆனால் நடக்கும் பணிகள் அப்படியாக தெரியவில்லை.
எனவே திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் அவர்கள் மக்கள் வரிபணத்தை வீணடிக்கும் இது போன்ற திட்டத்தை தடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன்.
அன்புடன்
வக்கீல்.S.R.கிஷோர்குமார்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் நீதி மய்யம் கட்சி,
திருச்சி தெற்கு மாவட்டம்.
செல்: 98659 62927.
பதிவு: 09.08.2025, 11.30.A.m