
திருச்சியில் ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தலைமையிலான சமத்துவ நடைபயணம் இன்று மாலை 6 மணிக்கு திருச்சி தெற்கு மாவட்ட எல்லையான கோவில்பட்டி இலஞ்சமேட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் மதிமுகவினர் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் திரண்டு வரவேற்றனர்.

தாரை தப்பு வாத்தியங்கள் முழங்க மாடு மயிலாட்டம் கட்டைக்கால் மனிதர்கள் ஆட்டத்துடன் நடைபயணம் மேற்கொண்ட வைகோ அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் நூற்றுக் கணக்கான பெண்கள் குலவையிட்டு ஆரத்தி எடுத்து நடைபயணம் வெற்றி பெற திலகமிட்டு வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன் துணைப் பொதுச்செயலாளர்கள் டாக்டர் ரொஹையா தி.மு.இராசேந்திரன் நடைபயண ஒருங்கிணைப்பாளர் சு.ஜீவன் தொண்டர் அணிச்செயலாளர் பாஸ்கரசேதுபதி இளைஞர் அணிச் செயலாளர் ஆசைத்தம்பி மாணவர் அணிச்செயலாளர் பால.சசிகுமார் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆ.துரைராஜ் மாநில கலைத்துறை துணைச் செயலாளர் மேட்டுக்கடை பொ.சண்முகம் மருங்காபுரி வடக்கு ஒன்றியச் செயலாளர் நெல்லிப்பட்டி குமரேசன் மருங்காபுரி தெற்கு ஒன்றியச் செயலாளர் மருதம்பட்டி நடராசன் மாவட்ட துணைச் செயலாளர் பெ.ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


