NTT TAMIL

Current Date and Time
Loading...

மதுரையில் வரும் ஜூன் 22ல் ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட் டில் சிறப்பு அழைப்பாளர்களாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ஹிந்து முன்னணி சார்பில், ‘குன்றம் காக்க… கோவிலை காக்க’ என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது

. கடந்த ஒன்றரை மாதமாக, தமிழகம் முழுவதும் வீடுதோறும் மக்களை சந்தித்து மாநாட்டில் பங்கேற்க ஹிந்து முன்னணியினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஐந்து லட்சத்துக்கும் மேற் பட்டோரை பங்கேற்கச் செய்ய முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறிய தாவது:

அரசியல் அல்லாத ஆன்மிக மாநாடாக இது நடைபெறும். மாநாட்டு பணிகள் நடக்கிறது. மும்முரமாக இதுவரை, 750 வேல் வழிபாடுகள் நடத்தி மாநாடு குறித்து தெரியப்படுத்தியுள் ளோம். மாநாட்டில் அறு படை வீடு தொடர்பான கண்காட்சி இடம்பெற உள்ளது.

முன்னாள் முதல் வர் பழனிசாமி, த.மா.கா., தலைவர் வாசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மடாதிபதிகள் மற்றும் தி.மு.க., – அ.தி. மு.க., – பா.ஜ.,- காங்., உள்ளிட்ட அனைத்து கட் சிகளைச் சேர்ந்த எம்.பி., எம்.எல். எம். எல். ஏ.,க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித் யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Related Posts

POST MY ADD