NTT TAMIL

Current Date and Time
Loading...

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேலின் மறு வடிவமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்க்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து 2 மணிநேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்தார். “கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசினேன்,” எனத் தெரிவித்தார்.


இந்த நிலையில், கட்சிக் கூட்டத்தில் அமித் ஷாவை புகழ்ந்து ஆர்.பி. உதயகுமார் பேசிய காணொலி தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியதாவது: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேலின் மறு வடிவமாக பார்க்கப்படும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, 2 மணிநேரத்துக்கு மேலாக தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருப்பது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

ஆனால், தமிழகத்தின் நலனுக்காக அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். இருமொழிக் கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

About Author
NTT தமிழ்

New Trichy Times இது சாமானியனின் உரிமைக்குரல்

View All Articles
Check latest article from this author !
வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக திருச்சி எஸ் டி பி ஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடுத்தெருவில் போராடும் பேராசிரியர்கள் – அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி -தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள் கோரிக்கை
1% செஸ் வரியை நீக்கி மக்காச்சோள விவசாயத்தைப் பாதுகாத்ததைப் போலவே, மக்காச்சோளத்திற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம் செய்து, அதற்கு ஈடாக மானியம் வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் துரை வைகோ எம்.பி வேண்டுகோள்.
தொடரும் பாலியல் தொல்லையா? அதிகாரிகள் ஆய்வு.ஆசிரியரே புகார் கொடுக்க உடனடி நடவடிக்கையில் இறங்கிய திருச்சி மாவட்ட நிர்வாகத்தினருக்கு குவியும் பாராட்டுக்கள்.

Related Posts

POST MY ADD