




போராட்ட களங்களின் நாயகன் தலைவர் வைகோ
அந்த தலைவருக்கேற்ற தனயன் மக்கள் களத்தில் மாவீரன் துரைவைகோ
அவருகளுக்கேற்ற தம்பி நம்பிக்கை நாயகன் செயல்வீரர் மணவையாருக்கு 50
என் பார்வையில் மணவையார்
பொதுவாக அரசியல் வாழ்க்கை என்றாலே ஆடம்பர வாழ்க்கை சொகுசு கார்கள்,ஏவியவுடன் வேலையாட்கள்,கண்ணசைவிற்க்கு காத்திருக்கும் தொண்டர்கள் என்றெல்லாம் இருக்கும்… ஆனால் இவர் தேர்ந்தடுத்த பாதை அப்படியல்ல…
அரசியலில் நேர்மை… பொதுவாழ்வில் தூய்மை… என்ற இலட்சியத்தை கொண்ட ஒப்பற்ற தலைவரின் தொண்டனாக புறப்பட்டு தனக்கு எத்தனையோ இன்னல்கள்,தடங்கல்கள் வந்த போதும் அவர் சென்றடைந்த தலைவரின் இலட்சியத்திற்க்கும், கொள்கைக்கும் எந்த கலங்கமும் அவரால் ஏற்படாத வகையில் கடந்த 32 ஆண்டுகளாக மறுமலர்ச்சி திமுகாவின் தொண்டனாக தொடங்கி இன்று மாவட்டச்செயலாளராக தன்னுடைய கழக பணியை சிறப்பாக செய்துக்கொண்டு இருக்கிறார்…

போராட்டகளங்களின் நாயகனாக விளங்கும் தலைவரின் வார்ப்பாகவே செயல்படக்கூடிய திறன் கொண்டவர்
1.மணப்பாறைக்கு வரவிருந்த டோல்கேட் மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் இருந்தமையால் அதை அன்றைய மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் முன் நிலையில் மக்கள் போராட்டம் மூலமாக மாற்றியமைத்து வையம்பட்டி அருகே அதை அமைத்து கொடுத்தல்…

2.மணப்பாறை நகரினுள் உயரழுத்து மிண் கம்பி வரவிருந்ததை மக்களுக்கு இடையூரு ஏற்படுத்தும் என முன்னறிந்து தடுத்து நிற்றுத்தியது…
3.மணப்பாறை நகரில் அரசு கலைக்கல்லூரி அமையவேண்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மணப்பாறை வந்த பொழுது அவர்கள் முன் நிலையில் போராட்டம்…

4.மணப்பாறை வழிய செல்லும் அனைத்து ரயில்களும் அங்கு நின்ற செல்ல வேண்டுமென்று கழகத்தோழர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் போராட்டம்…
5.மணப்பாறை மதுரை ரோட்டில் இருந்து குடிநீர் மேல்தேக்க தொட்டியில் இருந்து புதியதாக பொன்னகர் என்ற பகுதிக்கு குழாய் பதித்ததை மக்கள் சார்பாக கண்டித்து நகராட்சியிடம் இருந்து அதை நிறுத்தி வைத்தல்…

6.2018 காலங்களில் மணப்பாறையில் பெரும் நிலத்தடி நீர் வரட்சி ஏற்பட்ட பொழுது ஆயிரம் அடிக்குமேல் ஆழ்துளை கிணறு அமைத்து மக்களின் நீரை உறுஞ்சிய தனியார் நிறுவணத்தை கண்டித்து மக்கள் போராட்டம் மூலம் அதை தடுத்து நிறுத்தியது

போன்ற பல்வேறுப்பட்ட மக்கள் நல பிரச்சணைக்களை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டவரே நம்மவர் செயல்வீரர் மாவட்டக்கழகச்செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவருடைய இந்த 50வது பிறந்தநாளில் அவர் வாழ்வில் செய்த சாதணையை எனக்கு தெரிந்தவையை எடுத்துரைக்கும் பெருமை எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி…

அவர் செயல்பாடுகளும் மக்கள் பணியும் இன்னும் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் தொடர்ந்துக்கொண்ட இருக்கும் என்று வாழ்த்தி மகிழ்கின்றது நியூ திருச்சி டைம்ஸ் குழுமம்